News November 25, 2024
அமைகிறதா குடியரசுத் தலைவர் ஆட்சி?

மகாராஷ்டிராவில் நாளையுடன் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனால், உடனடியாக ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்தில் BJP உள்ளது. ஆனால், இதுவரை கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவு பெறாததால் இன்னும் முதல்வர் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், புதன்கிழமை ஜனாதிபதி ஆட்சி அமையலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேநேரம், சில நாள் அவகாசம் அளிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்றும் சொல்லப்படுகிறது.
Similar News
News October 29, 2025
இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய NDA: ராகுல் காந்தி

பிஹார் இளைஞர்களின் கனவு & ஆசைகளை மோடி, நிதிஷ்குமார் தலைமையிலான NDA கூட்டணி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பிஹார் எல்லா வளர்ச்சி குறியீடுகளிலும் பின்தங்கியே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிஹார் இளைஞர்களின் எதிர்காலத்தையும் மோடி – நிதிஷ் இணைந்து நாசமாக்கியதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
News October 29, 2025
Cinema Roundup: விரைவில் ‘பராசக்தி’ பர்ஸ்ட் சிங்கிள்

*’பராசக்தி’ பர்ஸ்ட் சிங்கிள் வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல். *யஷ்-ன் ‘டாக்ஸிக்’ படத்தின் பெரும்பாலான காட்சிகளை ரீ-ஹூட் செய்ய படக்குழு முடிவு. *மிருணாள் தாக்கூரின் ‘டகாய்ட்’ படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. *மாரி செல்வராஜுக்கு ‘இயக்குநர் திலகம்’ என வைகோ பட்டம் சூட்டியுள்ளார்.
News October 29, 2025
அரசியலில் குதிக்கிறாரா MS தோனி?

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணையமைச்சர் ரக்ஷா கட்சே, தோனியை சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள MSD-ன் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது, விளையாட்டில் உளவியல் ரீதியான பயிற்சிக்கான மேம்பாடு & விளையாட்டுகளுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துதல் குறித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது.


