News March 21, 2024
தொகுதியை தவறாக அறிவித்த பாஜக

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில், தூத்துக்குடி தொகுதியில் நயினார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகுதியை ஏற்கெனவே தமாகாவுக்கு பாஜக வழங்கியிருந்த நிலையில், குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து மறு அறிவிப்பை வெளியிட்ட பாஜக, நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
Similar News
News November 8, 2025
போருக்கு ரெடி: பாகிஸ்தானுக்கு ஆப்கன் பதிலடி

இஸ்தான்புல்லில் நடத்த PAK-AFG இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. இதனையடுத்து இனி பேச்சுவார்தை நடத்த வாய்ப்பில்லை என பாகிஸ்தான் <<18234772>>அமைச்சர் ஆசிப் <<>> கூறியிருந்தார். இதனால் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதும் ஆப்கான், போருக்கு தயார் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக PAK-AFG எல்லையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 8, 2025
6 கிலோவில் பிறந்த அதிசய குழந்தை PHOTO ❤️❤️

பிறந்த குழந்தைகள் சராசரியாக 3 கிலோ வரை இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால், ஆஸ்திரேலியாவில் அதற்கு டபுள் மடங்காக 6 கிலோவில் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் பெண் ஒருவர். பெரிய சைஸில் இருக்கும் அந்த பச்சிளம் குழந்தையின் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரசவத்தின்போது அதிக வலி ஏற்பட்டதாகவும், தான் பிழைக்கமாட்டேன் என எண்ணியதாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
தினமும் இந்த பழங்களை சாப்பிடலாம்

இந்தப் பழங்கள் வெறும் சுவையானவை மட்டுமல்ல, உங்கள் உடல் விரும்பும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. என்னென்ன பழங்கள், நம் அன்றாட ஆரோக்கியத்தில் பங்களிக்கின்றன என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE பண்ணுங்க. இவை தகவலுக்காக மட்டுமே. ஆலோசனை தேவைப்பட்டால் மருத்துவ நிபுணரை அணுகவும்.


