News November 25, 2024

மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

image

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 25, 2025

டிசம்பர் 25: வரலாற்றில் இன்று

image

*கிறிஸ்துமஸ்
*தேசிய நல்லாட்சி நாள் (Good Governance Day)
*1796 – வேலுநாச்சியார் நினைவுநாள்.
*1924 – அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள்.
*1968 – கீழ்வெண்மணி படுகொலை.
*1972 – ராஜாஜி நினைவுநாள்.
*1977 – சார்லி சாப்ளின் நினைவுநாள்.

News December 25, 2025

சிவாஜிக்கு பதிலடி கொடுத்த நிதி அகர்வால்

image

சமீபத்தில் நிதி அகர்வால், ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கித் தவித்த வீடியோ வைரலானது. இதுதொடர்பாக போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நடிகைகளின் ஆடை பற்றி நடிகர் <<18655275>>சிவாஜி<<>> பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து அவர் மன்னிப்பும் கோரியிருந்தார். இந்நிலையில், ‘Blaming the victim is called manipulation’ என நிதி அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார்.

News December 25, 2025

ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

image

*நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.
*உங்களுடைய எதிரிகளை தன்னுடைய எதிரிகளாக நினைப்பவனே உங்கள் நண்பன்.
*வெற்றிகரமான பொய்யராக வருமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான நினைவாற்றல் கிடையாது.
*எதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், அது ஒரு நாள் வந்தே தீரும் என்பதே.

error: Content is protected !!