News November 25, 2024
DAY 1 IPL ஏலம்: டெல்லி அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள்

IPL 2025ஆம் ஆண்டு போட்டிக்காக டெல்லி கேபிடெல்ஸ் அணி ஏலத்தில் எடுத்த வீரர்களை தெரிந்து கொள்வாேம். *கே.எல். ராகுல் – ரூ.14 கோடி *ஸ்டார்க் – ரூ.11.75 கோடி * நடராஜன் – ரூ.10.75 கோடி *ஜேக் பிரேசர் – ரூ.9 கோடி *ஹேரி புரூக் – ரூ.6.25 கோடி *அசுதோஸ் சர்மா – ரூ.3.80 கோடி *மொஹித் சர்மா – ரூ.2.20 கோடி *சமீர் ரிஸ்வி – ரூ.95 லட்சம் *கருண் நாயர் – ரூ.50 லட்சம்.
Similar News
News August 21, 2025
அண்ணாமலைக்கு டிரான்ஸ்ஃபர்.. அடுத்து என்ன?

ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து ஒதுங்கியிருப்பது போல அண்ணாமலை காட்டிக்கொண்டாலும், தனது ஆதரவாளர்கள் மூலம் நயினாருக்கு அவர் குடைச்சல் கொடுப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதையறிந்த டெல்லி பாஜக, கூட்டணிக்கு சேதாரம் வரக்கூடாது என்பதற்காக மேற்கு வங்க தேர்தல் பொறுப்பாளராக அவரை நியமிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 21, 2025
BREAKING: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில், வரும் 26-ம் தேதி திட்ட விரிவாக்கத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஏற்கெனவே காலை உணவுத் திட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறும் நிலையில், தற்போது விரிவாக்கம் செய்வதன் மூலம், மேலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவர்.
News August 21, 2025
Post Man மூலம் Mutual Fund திட்டம்.. விரைவில் அமல்

தபால்காரர்கள் மூலம் பொதுமக்களை மியூச்சுவல் ஃபண்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆந்திரா, பிஹார், ஒடிசா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 1 லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்த பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் ‘மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ்’ என அழைக்கப்படுவர்.