News November 25, 2024
தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, ஆலங்குளம் ஆகிய நான்கு உட்கோட்ட பிரிவுகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் பட்டியலை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு 100 என்ற எண்ணை அழைத்து தகவல் சொல்லலாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News October 2, 2025
தென்காசி மக்களே., இங்கு இலவச மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள சிவகுருநாதபுரத்தில் வருகிற அக்டோபர் -04 ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகுருநாதபுரத்தில் வைத்து நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெற வேண்டி தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
News October 2, 2025
தென்காசி: டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கு <
News October 2, 2025
தென்காசி: கடைகள் ஏலம் அறிவிப்பு

தென்காசி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ள 77 கடைகளை குத்தகை உரிமம் அனுபவித்துக் கொள்ள ஆணையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஏலம் விடப்பட உள்ளது. அக்டோபர் 24, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏலம் நடைபெறும் நாளில் காலை 11 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும், 11.30 மணிக்கு ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.