News November 24, 2024
SDPI கட்சியின் மாநில தலைவராக மீண்டும் நெல்லை முபாரக் தேர்வு

SDPI கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியும் இன்று (நவ.24) நடைபெற்றது. தமிழக தலைவராக மேலப்பாளையத்தைச் சேர்ந்த நெல்லை முபாரக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
நெல்லையில் 11,767 காலியிடங்கள்… APPLY NOW

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.10ம் தேதி சனிக்கிழமை பாளை. செயின்ட் ஜான் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 5, 8, 10, 12th, டிப்ளமோ, ITI, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 86 நிறுவனங்களில் 11,767 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுளளது. வேலைதேடுவோர் tnprivatejobs.tn.gov.in என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தொடர்புக்கு – 9499055929. SHARE பண்ணுங்க.
News January 1, 2026
நெல்லையில் இனி 1000 பேருக்கு IT வேலை

ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், நெல்லை, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்தது 500 – 1,000 பேர் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT
News January 1, 2026
நெல்லை: ஜன.4 முதல் வீடு தேடி வரும்

தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் மாதம்தோறும் 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருப்பிடங்களுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு ஜனவரி மாதத்தில் வருகிற 4, 5 ஆம் தேதிகளில் ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வினியோகம் செய்யப்பட உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட பயனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.


