News November 24, 2024
அனைத்து கல்லூரிகளுக்கும் UGC உத்தரவு

ஃபிட் இந்தியா வாரத்தையொட்டி கல்லூரிகளில் உடல்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள UGC அறிவுறுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஃபிட் இந்தியா வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. நவ.31 வரை நடைபெறும் இந்த நிகழ்வில், யோகா, தற்காப்புக் கலை, நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளில் மாணவர்களை 4-6 நாள்களுக்கு ஈடுபடுத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் UGC கேட்டுக்கொண்டுள்ளது.
Similar News
News October 31, 2025
பொங்கல் பரிசாக ₹5,000?… அமைச்சர் குட் நியூஸ்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணியிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, CM ஸ்டாலின் இதுகுறித்து அறிவிக்க இருப்பதாக மகிழ்ச்சியான தகவலை அவர் தெரிவித்துள்ளார். இதனால், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
News October 31, 2025
பிஹாரிகளை தமிழக மண் காப்பாற்றுகிறது: RS பாரதி

பிஹார் மக்களை தமிழக மண் காப்பாற்றுவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சொந்த மாநிலத்திலேயே ஒழுங்காக வேலை கொடுத்திருந்தால் பிஹார் மக்கள் ஏன் தமிழகத்திற்கு வரப்போகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழகம் வளமாக இருப்பதால் தான் பிஹார் மக்கள், இங்கே வருவதாகவும் அவர் பேசியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் பிஹார் மக்களை திமுக அரசு துன்புறுத்துவதாக PM மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.
News October 31, 2025
உலகளவில் இந்தியாவுக்கு 3-வது இடம்

உலக வன வள மதிப்பீடு 2025-ன் படி, இந்தியா உலகளவில், 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது வனப்பகுதியைப் பாதுகாக்கும் இந்தியாவின் உறுதியைக் எடுத்துக்காட்டுகிறது. மேலும், ஆண்டுதோறும் வனப்பரப்பை விரிவுபடுத்துவதில், இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த வனப்பகுதி 1,797 லட்சம் ஏக்கர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலக வனப்பகுதியில் சுமார் 2% ஆகும்.


