News November 24, 2024
பாஜக பிரமுகர் கொலையில் வாலிபர் கைது

பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்த பாளை மூலிகுளம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் பாண்டியன் கடந்த ஆண்டு ஆக.30 அன்று வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாளை போலீசார் 13 பேரை கைது செய்தனர். இவர்கள் ஜாமீனில் இருப்பதால் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். இதில் அஜித் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததால் தலைமறைவாக இருந்த அஜித்குமார் இன்று கைது செய்தனர்.
Similar News
News November 8, 2025
பொங்கல் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் வருவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் படி சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருநெல்வேலிக்கு வருவதால் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு 11ம் தேதி முதல் காலை 8 மணிக்கு துவங்குகிறது. *SHARE
News November 8, 2025
நெல்லை: காவல் ஆணையர்கள் இருவருக்கு பதவி உயர்வு

நெல்லை மாநகர காவல் அலுவலக நிர்வாக அலுவலர் அற்புதராஜ் முதுநிலை நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பெற்று சேலம் சரக டிஐஜி அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணிய பெருமாள், கோயம்புத்தூர் சரக டிஐஜி அலுவலகத்திற்கு முதுநிலை நிர்வாக அலுவலராக மாற்றம் செய்யபட்டார்.
News November 8, 2025
நெல்லை : EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <


