News November 24, 2024
அமெரிக்காவில் சாதனை படைக்கப்போகும் ‘கேம் சேஞ்சர்’

சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்பாக டிச.21ஆம் தேதி இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஷோ அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்தியப் படம் ஒன்று அமெரிக்காவில் ப்ரீ ரிலீஸ் ஷோ செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இப்படத்தில் ஊழலுக்கு எதிராக போராடும் IAS அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.
Similar News
News August 18, 2025
பாஜக எதிர்பார்க்கும் தொகுதிகள் எத்தனை?

2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளை குறிவைத்துள்ளது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றிபெற வாய்ப்புள்ள 35 தொகுதிகளை பாஜக தேர்வு செய்துள்ளதாம். இம்மாத இறுதியில் மீண்டும் தமிழகம் வரும் பாஜக அமைப்பு பொ.செ., பிஎல் சந்தோஷ் இதுபற்றி EPS-யிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தமுறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4-ல் வென்றது.
News August 18, 2025
CPR-யை பாஜக தேர்வு செய்தது ஏன்? பின்னணியில் புது கணக்கு

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக CP. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை கணக்கிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொங்கு பகுதிக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை மக்கள் மனதில் பதியவைத்தால், இப்பகுதியில் ஏற்கனவே வலுவாக உள்ள அதிமுக, பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
News August 18, 2025
ஆகஸ்ட் 18: வரலாற்றில் இன்று

1945 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம்.
1954 – தமிழக அரசியல்வாதி வி.கே.சசிகலா பிறந்ததினம்.
1928 – சென்னை மியூசிக் அகடாமி துவக்கமானது.
1227 – மங்கோலிய பேரரசர் செங்கிஸ்கான் மறைந்த தினம்.
1920 – அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம் அதிகாரப்பூர்வமானது.