News November 24, 2024
பழனிக்கு ரூ.120 இல் ரயில் பயணம்

திண்டுக்கல் – கோவை சிறப்பு மெமு ரயில் மூலம் நெல்லைப் பயணிகள் ரூ.120 செலவில் பழனி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில்- கோவைக்கு பகலில் செல்லும் ரயிலில் நெல்லையிலிருந்து ஏறும் பயணிகள் மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல்லில் இறங்கி அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் மெமோ ரயிலில் ஏறினால் 3 மணிக்கு பழனிக்கு செல்ல முடியும். இதற்கு நேரடி டிக்கெட் ரூ.120 மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
நெல்லை: 5.66 லட்சம் SIR படிவம் விநியோகம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. மாவட்ட முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1490 வாக்குச்சாடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 66 ஆயிரம் பேர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யபட்டதாக ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார்.
News November 8, 2025
நெல்லையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (நவ.08) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகளை இந்த குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பம் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News November 8, 2025
நெல்லை: போஸ்டர் ஒட்டியதற்கு கொலை; கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெல்லை கொங்கன்தாம்பாறை சமுதாய நலக்கூடம் அருகே கண்ணீர் அஞ்சலி வால் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் இசக்கி பாண்டி(23) என்பவர் 2013ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கபட்டது. பச்சாண்டி(39), இன்பராஜ்(39), முத்துக்குமார்(37) ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.1500 அபராதமும் விதித்து நெல்லை மாவட்ட 3 வது கூடுதல் அமர்வு நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.


