News November 24, 2024

கரூரில் புகழ்பெற்ற மலை புகழிமலை

image

புகழிமலை கோயில் புகழூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கரூரில் இருந்து 17கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறிய மலையின் மீது சுவாமி சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். இங்கு அமைந்துள்ள சமணர்படுக்கை மற்றும் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். கரூர் மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த மலை சிறப்பை COMMENT பண்ணுங்க மக்களே..

Similar News

News October 28, 2025

கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சியில் புதன்கிழமை ( 29.10.2025 ) வார்டு எண் 47 நவலடியான் மண்டபம் சுக்காலியூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 13 துறைகள் 43 சேவைகள் அடங்கும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மருத்துவ காப்பீடு அட்டை, ரேஷன் கார்டு திருத்தம் போன்ற கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News October 27, 2025

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

image

கரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தலைவர்/கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நாளை (28.10.25) காலை 10:30 மணிஅளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ள இரண்டாம் தளத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் 10 நிமிடம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி அளிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.

News October 27, 2025

கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கே பேட்டை மற்றும் வதியம் ஆகிய பகுதிகளில் நாளை, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதில் கே பேட்டை மற்றும் வதியம் பகுதியை சேர்ந்த அனைவரும் தங்களது கோரிக்கைகளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் சமர்ப்பிக்கலாம். இதில் 13 துறைகள் 43 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முகாம் கே பேட்டை சமுதாயக் கூடத்தில் நடைபெற உள்ளது.

error: Content is protected !!