News November 24, 2024
இலவசமாக கார் டிரைவிங் பயிற்சி.. TN அரசு அறிவிப்பு

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இலவசமாக கார் ஓட்டும் பயிற்சி அளிக்கப்படும் என்று TN அரசு அறிவித்துள்ளது. 45 நாள்கள் வாகன ஓட்டுநர், 30 நாள்கள் போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. குறைந்தபட்ச கல்வித் தகுதி 8,10, 12ஆம் வகுப்பு ஆகும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இத்திட்டத்துக்கு www.nanmudhalvan.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News January 29, 2026
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற கணவன் – மனைவி!

வீட்டில் ஒருவருக்காவது அரசு வேலை கிடைக்காதா என ஏங்குபவர்களுக்கு மத்தியில், இந்த தம்பதிக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த ஹேமச்சந்திரா- வினிதா தம்பதி ஹைதராபாத்திலுள்ள IT கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். ஆனாலும், அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு, குரூப் 2 தேர்வு முடிவு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வினிதா சப்-ரிஜிஸ்டாராக, ஹேமச்சந்திரா கலால் வரி ஆய்வாளராக தேர்வாகியுள்ளனர்.
News January 29, 2026
சற்றுமுன்: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹91.79 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 29, 2026
Oh Sh**.. பைலட்டின் கடைசி வார்த்தைகள்

அஜித் பவார் பயணித்த விமானத்தை இயக்கிய பைலட்கள் சுமித் கபூர் & சாம்பவி ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு சில விநாடிகள் முன்னர், 2 பைலட்களும் ‘Oh sh**’ என அலறியது Black box-ல் பதிவாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மோசமான வானிலை இந்த விமான விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அஜித் பவாரின் இறுதி அஞ்சலி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


