News November 24, 2024

சிறுமி கொலை; 6 பேர் மீது குண்டாஸ்

image

சென்னை அமைந்தகரை மேத்தா நகர் சதாசிவ மேத்தா தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த அக்.31 ஆம் தேதி சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான நிஷாத், அவரது மனைவி நதியா, லோகாஷ், ஜெயசக்தி, சீமா, மகேஸ்வரி ஆகிய 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

Similar News

News September 1, 2025

சென்னையில் இன்று முதல் உயர்வு…

image

சென்னையில் இன்று (செப்.1) முதல் டீ, காபி விலை உயர்த்தி விற்கப்படும் என டீக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதன்படி▶️பால் – ரூ.15, ▶️லெமன் டீ – ரூ.15,▶️காபி – ரூ.20, ▶️ஸ்பெஷல் டீ – ரூ.20, ▶️ராகி மால்ட் – ரூ.20, ▶️சுக்கு காபி – ரூ.20, ▶️பார்சல் டீ – ரூ.45,▶️பார்சல் காபி -ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்க கருத்தை பதிவு செய்து மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 1, 2025

சென்னையில் இலவச பயிற்சி!

image

சென்னை, கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் உள்ள உதவியாளர் பணிக்கு 157 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டுறவு வங்கி தேர்வுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இன்று (செப்டம்பர் 1) முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். <>தகவலுக்கு.<<>> ஷேர்!

News August 31, 2025

சென்னையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 31) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!