News November 24, 2024

IPL Auction: ₹10 கோடிக்கு ஏலம் போன ஷமி

image

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ₹10 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடாததால் இந்த முறையும் குறைந்த விலைக்கே ஏலம் போயிருப்பதாக தெரிகிறது. Stay tuned with Way2News for IPL live Auction Updates….

Similar News

News December 12, 2025

Why SKY? கொந்தளிக்கும் இந்திய ரசிகர்கள்!

image

இந்திய T20 கேப்டன் SKY மோசமான ஃபார்மில் உள்ளார். கடந்த 20 இன்னிங்ஸில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. நேற்றைய போட்டியிலும் வெறும் 5 ரன்னில் வெளியேறிய அவர், ஒரே ஒரு போட்டியில் மட்டும் 47* ரன்களை எடுத்துள்ளார். அடுத்த ஆண்டு T20 WC நடைபெறும் நிலையில், இது இந்திய அணிக்கு பின்னடைவான விஷயமே. கேப்டன்ஷிப் மட்டுமில்லை, பேட்டிங் வேண்டுமல்லவா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News December 12, 2025

வயதை வென்ற வசீகரம் ரஜினிகாந்த்: CM ஸ்டாலின்

image

ஆறிலிருந்து அறுபது வரைக்கும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என ரஜினிகாந்துக்கு CM ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். தனது X பக்கத்தில், வயதை வென்ற வசீகரம் ரஜினிகாந்த் என பதிவிட்டுள்ள அவர், மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்களின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 75-வது பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

News December 12, 2025

BREAKING: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

image

2021 தேர்தலில் விட்டதை பிடிக்க அதிமுகவும், 2026 தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க திமுகவும் புதிய வியூகங்களோடு தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக அமமுக மற்றும் OPS அணியில் உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு அதிமுக நிர்வாகிகளுக்கு EPS அசைன்மென்ட் கொடுத்துள்ளார். அந்த வகையில், திருவாரூர் அமமுக முக்கிய நிர்வாகியான வலங்கைமான் ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

error: Content is protected !!