News November 24, 2024
பஞ்ச் வைத்து வாழ்த்திய உதயநிதி

நாகையில் திமுக மாநில மீனவரணி துணை செயலாளர் மனோகரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது, இல்ல இல்லத் இணைய உள்ள இணையர் இருவரும் கழகமும் கலைஞரும் போல் கழக தலைவரும் உழைப்பும் போல் பல்லாண்டு வாழ்க என பஞ்ச் வைத்து பேசினார்.
Similar News
News November 8, 2025
நாகை: மீவர்களை விடுவிக்க கோரி தவெக சார்பில் போராட்டம்

நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 35 மீனவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மின்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். இந்நிலையில், மீனவர்களை விடுவிக்க கோரியும். இலங்கை கடற்படை, தமிழக அரசை கண்டித்தும் தவெக சார்பில் நேற்று அவுரித்திடலில் போராட்டம் நடைபெற்றது. இதில், தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் கலந்து கொண்டார்.
News November 8, 2025
நாகை: கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம், தலைஞாயிறு, திருமருகல் ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு நவம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 18 வயதிலிருந்து 34 வயது வரை உள்ளவர்கள், இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கல்விச்சான்று, சாதிச்சான்று மற்றும் முன்னுரிமைக்கான ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
நாகை: ரேசன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று (நவம்பர் 8) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகள் தொடர்பாக விண்ணப்பம் அளித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


