News November 24, 2024
அடேங்கப்பா…IPL’ன் பணக்கார வீரரான ரிஷப் பண்ட்!!

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரிஷப் பண்ட், ஏலத்தில் ₹27 கோடிக்கு LSG அணியால் வாங்கப்பட்டார். பண்ட்டிற்காக LSG, RCB, SRH அணிகள் போட்டியிட்டன. அவருக்காக DC அணி RTM பயன்படுத்தி ₹7 கோடியை அதிகரித்த போதிலும், LSG அணி அவரை வாங்கியது. இதன் மூலம், IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையும் பெற்றார் பண்ட். Stay tuned with Way2News for IPL live auction updates….
Similar News
News November 8, 2025
விஜய் பிளாஸ்ட் PHOTOS

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ வெளியாகியுள்ளது. இதில், ரசிகர்கள் விஜய்யை ஃபிரேம் பை ஃபிரேமாக ரசித்து, SM-யில் போட்டோஸ் வெளியிட்டு கொண்டாடுகின்றனர். பிளாஸ்ட் போட்டோக்களை மேலே பகிர்ந்துள்ளோம். உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க. கச்சேரி கேட்டீங்களா? எப்படி இருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.
News November 8, 2025
FLASH: தங்கம் விலை குறைந்தது

தினமும் ₹1,000, ₹2,000 என எகிறிய தங்கம் விலை, இந்த வாரம் மக்களுக்கு மகிழ்ச்சியையே கொடுத்துள்ளது. இந்த வார வர்த்தகம் இன்று மாலையுடன் நிறைவடைந்திருக்கிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலை சற்று குறைந்து 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹90,400-க்கு விற்பனையாகி வருகிறது. இது முந்தைய வார விலையை விட ₹80 குறைவாகும். இதேபோல், ஒரு வாரத்தில் வெள்ளி கிலோவுக்கு ₹1,000 குறைந்திருக்கிறது.
News November 8, 2025
மார்க்ஸ்.. பெரியார்.. அம்பேத்கர்: ஜனநாயகனின் அரசியல்

ஜனநாயகன் படத்தின் முதல் பாடலான <<18236201>>‘தளபதி கச்சேரி’யின்<<>> பீட் ஃபுல் பவர்பேக்டாக மட்டுமல்ல, விஜய்யின் அரசியலை பேசுவதாகவும் உள்ளது. காலம் பொறக்குது… தனக்குனு வாழாத, தரத்திலும் தாழாத.. புது வழி என்றெல்லாம் வருகிறது. அதிலும் ‘ஜாதி பேதமெல்லாம் லேதய்யா’ என்ற வரிக்கு காரல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் உருவங்களை காண்பித்து, தனது அரசியல் வழியை விஜய் அடித்துச் சொல்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.


