News November 24, 2024
IPL Auction: ₹26.75 கோடிக்கு ஐயரை வாங்கிய PBKS

2024ம் ஆண்டு KKR அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் ஏலத்தில் ₹26.75 கோடிக்கு PBKS அணியால் வாங்கப்பட்டுள்ளார். Bidding’ஐ KKR அணி தொடங்கிய நிலையில், அவருக்காக பஞ்சாப், டெல்லி அணிகள் கடுமையாக போட்டி போட்டன. இறுதியாக அவரை, ₹26.75 கோடிக்கு PBKS அணி வாங்கியது. Stay tuned with Way2News for IPL live Auction Updates….
Similar News
News August 26, 2025
தவெக கூட்டணி.. விஜய்யின் மாஸ்டர் பிளான் வெளியானது

1967, 1977-ம் ஆண்டு போல் TN தேர்தல் வரலாறு மாறும் என விஜய் பேசி வருவதற்கு பின்னால், மாபெரும் மாஸ்டர் பிளான் இருப்பது தெரியவந்துள்ளது. DMK, ADMK கூட்டணி ஆட்சிக்கு பிடி கொடுக்காமல் உள்ளன. இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியில் பங்கு என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்துள்ளார் விஜய். கூட்டணி ஆட்சி என்ற கருத்தை கூறி வரும் காங்கிரஸ், PMK, DMDK உள்ளிட்ட கட்சிகளை TVK ஒருங்கிணைக்க முயல்கிறதாம்.
News August 26, 2025
டிரம்ப்புக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த மோடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் 50% வரிவிதிப்பை மறைமுகமாக குறிப்பிட்ட PM மோடி, எவ்வளவு அழுத்தம் வந்தாலும், சிறு தொழில்முனைவோர்கள், விவசாயிகளுக்கு தீங்கு ஏற்பட விடமாட்டோம் என மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் பேசிய அவர் உலகில், அனைவரும் பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டு அரசியல் செய்வதில் மும்முரமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News August 26, 2025
காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் CM

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை சென்னை மயிலாப்பூரில் இன்று CM ஸ்டாலின் விரிவாக்கம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் CM பகவந்த் மான் பங்கேற்கிறார். இந்த திட்டத்தால் ஏற்கெனவே 18.5 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதால் மேலும் 3.06 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.