News November 24, 2024
கார் ரேஸ்காக அஜித் எடுத்த முடிவு..!

அடுத்த 6 மாதங்களுக்கு எந்த புதுப்படத்திலும் அஜித் கமிட்டாக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ‘குட் பேட் அக்லி’ மற்றும் விடாமுயற்சியின் ஷூட்டிங்கை வரும் டிசம்பருக்குள் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கார் ரேஸில் கவனம் செலுத்தும் வகையில், 2025 ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகுதான் புதுப்படத்தில் கமிட்டாவார் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Similar News
News January 28, 2026
கூட்டணி கட்சிகளால் திமுகவுக்கு நெருக்கடியா?

பிப். 3-ம் தேதிக்கு பிறகு கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தொடங்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ்(25), விசிக(6), CPI(6), CPM(6) உள்ளிட்ட கட்சிகள் இம்முறை அதிக சீட்டுகளை கேட்க திட்டமிட்டுள்ளதால், அது திமுகவுக்கு நெருக்கடியை அதிகரிக்கலாம். கமலின் மநீம கட்சியும் அதிக தொகுதிகளை கேட்பதால் இம்முறை DMK போட்டியிடும் இடங்கள் கடந்த முறையைவிட குறைய வாய்ப்புள்ளது.
News January 28, 2026
தமிழர்கள் இளிச்சவாயர்கள் அல்ல: எ.வ.வேலு

கட்சி ஆரம்பித்த உடனேயே முதல்வராகும் ஆசை சிலருக்கு இருப்பதாக விஜய்யை அமைச்சர் எ.வ.வேலு மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இல்லை எனவும் சாடியுள்ளார். நாடாளுமன்றம் தொடங்கி உள்ளாட்சி தேர்தல் வரை யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என தமிழர்களுக்கு நன்றாக தெரியும் எனவும், தமிழர்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 28, 2026
பிரபல நடிகர் மரணம்.. வெளியானது காரணம்

பிரபல ஸ்பேனிஷ் நடிகர் <<18974059>>அலெக்சிஸ் ஒர்டேகா<<>>(38) திடீரென மரணமடைந்த செய்தி, உலக திரை ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருக்கு எந்தவித உடல்நல பாதிப்பும் இல்லாததாகவே கூறப்படுவதால், இளம் வயதிலேயே மரணமடைந்ததால், அவரின் மரணத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன. இன்னும் குடும்பத்தினர் தரப்பில், அவர் எப்படி மரணித்தார் என்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்பதால், தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.


