News November 24, 2024

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுமன் என்பவரது 6 வயது மகன் நிவின் இன்று தனது வீட்டின் ஃபேன் ஸ்விட்சை போடும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். சிறுவனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 11, 2025

கள்ளக்குறிச்சி: போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக <>இந்த லிங்க் மூலம்<<>> ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். புகார் மீது உங்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு கிடைக்கும். இனி கவலையில்லாமல் பயணம் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க

News September 11, 2025

கள்ளக்குறிச்சி: வெட்டிய தலையுடன், சிறையில் சரண்

image

கள்ளக்குறிச்சி, மலைக்கோட்டாலம் கிராமத்தில் லட்சுமி மற்றும் தங்கராசு ஆகியோர் தலையை துண்டித்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த பின், பேருந்தில் ஏறி வேலூரில் உள்ள வேலூர் மத்திய சிறைக்கு சென்ற தன்னை கைது செய்யுமாறு போலீசாரிடம் கூறினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

News September 11, 2025

கள்ளக்குறிச்சி: ரூ. 1000 பெற, இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த லிங்கில் <<>>கிளிக் செய்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!