News March 21, 2024

நீலகிரி; பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

image

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை சற்றுமுன் வெளியானது. இந்தப்பட்டியலில் மொத்தம் 9 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், நீலகிரி தொகுதி வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் ஆ.ராசா இந்ததொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் எல்.முருகன் அந்த தொகுதியில் போட்டியிடுவதால் நீலகிரி ஸ்டார் தொகுதியாகியுள்ளது.

Similar News

News April 19, 2025

நீலகிரி மாவட்டம் முழுவதும் நெகிழி சேகரிக்கும் பணி!

image

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், அரசு மாணவர் விடுதிகள், வனப்பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், மாவட்ட எஸ். பி. நிஷா, கூடுதல் கலெக்டர் கவுசிக், வன அலுவலர் கவுதம் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்று, நெகிழி சேகரிப்பில் இன்று காலை 8 மணி முதல் ஈடுபட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 18, 2025

நீலகிரி: பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு 

image

நீலகிரி மாவட்டம் உதகை – குன்னூர் நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சேரம்பாடி பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் குன்னூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அருவங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 18, 2025

நீலகிரி: முக்கிய காவல்துறை எண்கள்

image

▶️நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் 0423-2223839.▶️கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் 0423-2223840. ▶️உதகை நகர துணை காவல் கண்காணிப்பாளர் 0423-2223811.▶️ உதகை கிராம துணை காவல் கண்காணிப்பாளர் 0423-2223829.▶️ குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் 04232-221834. ▶️கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் 04262-261227. ▶️தேவாலா துணை காவல் கண்காணிப்பாளர் 04262-260324. இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!