News November 24, 2024
ஓடும் அரசு பேருந்தில் தூக்குப்போட்டு தற்கொலை

ஆந்திராவில் திருப்பதி மாவட்டம் ஏர்பேடு பகுதியில் அரசு பேருந்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 3 பயணிகள் மட்டுமே இருந்த பேருந்தில் ஏறி பின் சீட்டில் அமர்ந்தவர், சிறிது நேரத்தில் தான் கொண்டு வந்த கயிற்றால் ஓடும் பேருந்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட நடத்துநர் போலீசில் புகார் அளித்தார். இறந்தவர் விவரம் மற்றும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
Similar News
News October 21, 2025
BREAKING: கூட்டணிக்கு வர விஜய்க்கு அழைப்பு விடுத்தார்

DMK மீண்டும் ஆட்சிக்கு வந்தால் TVK-வை ஆண்டவன் நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது என RB உதயகுமார் கூறியுள்ளார். ராட்சத பலம் கொண்ட DMK-வை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும் எனவும் வெளிப்படையாக விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், AP-ல் நடிகர் பவன் கல்யாண், சரியான முடிவு எடுத்ததால்தான் துணை முதல்வராக இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக, TVK-வை NDA-வில் இணைக்க <<18061640>>பேச்சுவார்த்தை<<>> நடப்பதாக தகவல் வெளியானது.
News October 21, 2025
ராமர் நீதியை போதிக்கிறார்: PM மோடி

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியா அநீதிக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டியது என PM மோடி தெரிவித்துள்ளார். கடவுள் ராமர் நீதியை போதிப்பதாகவும், அநீதியை எதிர்த்து போராட தைரியம் அளிக்கிறார் என்றும் நாட்டு மக்களுக்கு மோடி கடிதம் எழுதியுள்ளார். நக்சல்கள் ஒழிக்கப்பட்ட பல மாவட்டங்களில் முதல்முறையாக விளக்குகள் ஏற்றப்படுவதால், இந்த தீபாவளி சிறப்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News October 21, 2025
தொழில் தொடங்க விருப்பமா? இதை தெரிஞ்சுக்கோங்க

தற்போதைய பொருளாதார சூழலில் சுயதொழில் தொடங்கலாம் என்ற விருப்பம் பலருக்கும் வந்திருக்கலாம். என்ன தொழில் தொடங்கலாம் என யோசிப்பதற்கு முன்பு, தொழில் நிறுவனங்களில் எத்தனை வகைகள் உள்ளன, அவற்றிற்கான முதலீடு வரம்புகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வது அவசியம். தொழில் வகைகளை மேலே swipe செய்து தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொழிலை கமெண்ட்டில் சொல்லுங்கள்.