News November 24, 2024
ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் தீர்குறைக்கும் நாள் கூட்டம் நவ.26ஆம் தேதி நடப்பதாக கலெக்டர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நிர்வாக காரணங்களால் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அலுவலகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News August 5, 2025
விழுப்புரம் BC&MBC மக்களின் கவனத்திற்கு

விழுப்புரம் மக்களே, BC&MBC நலத்துறை சார்பில்
▶️இலவச பட்டா
▶️விலையில்லா சலவை பெட்டி
▶️விலையில்லா தையல் இயந்திரம்
▶️தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன்
▶️கல்வி உதவித்தொகை
▶️தலைசிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலை கல்வி
▶️விருதுகள் (ம) பரிசுகள் ஆகிய திட்டங்கள் செயல்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற விழுப்புர மாவட்ட BC&MBC நல அலுவலரை (04146 223264) தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்
News August 5, 2025
விழுப்புரம்: இளம் பெண் மாயம் – போலீஸ் விசாரணை

விழுப்புரம் திரு.வி.க வீதியை சேர்ந்தவர் அன்சாரி இவரது மகள் குல்சாத் பேகம் (23), இவர் நேற்று (ஆகஸ்ட் 4) வீட்டிலிருந்து மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News August 5, 2025
ராமதாஸ் வீட்டு WIFI மோடம் டிஎஸ்பியிடம் ஒப்படைப்பு

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டின் போன் மற்றும் சிசிடிவிக்கள் வைஃபை மூலம் ஹேக் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதன் தலைமையில் இன்று (ஆக.5) கோட்டக்கோப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் ராமதாஸ் வீட்டு வைஃபை மோடமை ஒப்படைத்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளனர்.