News November 24, 2024
விழுப்புரம் ஆட்சியர் தகவல்

2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதிச் சட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவுக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். விண்ணப்பங்களை இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600 010 என்ற முகவரியில் டிச.6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என விழுப்புரம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News August 6, 2025
விழுப்புரத்தில் இன்று (ஆக.6) உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.6) உங்களுடன் ஸ்டாலின் முகாம் திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், வானூர் வட்டாரம் பி.பி.எஸ் மஹால் டி.பரங்கனி, மேல்மலையனூர் கோடிஸ்வரன் திருமண மஹால் பெருவளூர், முகையூர் அலமேலு நாகராஜன் திருமண மண்டபம் அந்திலி, கோலியனூர் எம்.டி சேஷாத்திரி திருமண மண்டபம் தோகைபாடி, செஞ்சி காட்டுசித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. ஷேர் பண்ணுங்க.
News August 5, 2025
விழுப்புரம் குடோன் ஆய்வில் 27 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மாயம்

விழுப்புரம் மாவட்ட டாஸ்மார்க் குடோனில், சமீப காலமாக மது பாட்டில்கள் மாயமானதாக எழுந்த புகாரில் அடிப்படையில் இன்று சென்னை அதிகாரி குழுக்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பதிவேட்டில் உள்ள எண்ணிக்கையை விட 27 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் மாயமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தத் தொகையை அரசுக்கு, மாவட்ட அதிகாரிகள் அபராதமாக செலுத்த வேண்டும் என ஆய்வு குழுவினர் உத்தரவிட்டனர்.
News August 5, 2025
விழுப்புரத்தில் நாளை மாபெறும் தமிழ் கனவு

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி கூட்ட அரங்கில் நாளை (ஆக.6) காலை 10 மணிக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியார் ஷே.ஷேக் அப்துல்லா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை, சமூக சமத்துவம் மற்றும் பொருளாதார மேம்பாடு போன்றவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.