News November 24, 2024
3வது நாள் Lunch: இந்தியா 321 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் BGT டெஸ்டில் இந்தியா அணி 3ம் நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் மட்டும் இழந்து 275 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 321 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 141* ரன்களுடனும், படிக்கல் 25* ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Similar News
News January 13, 2026
உங்களுக்கு இந்த ஃபோபியா இருக்கா?

ஏதோ ஒன்றின் மீது ஏற்படும் அதீத அச்ச உணர்வையே ஃபோபியா என்று கூறுகின்றனர். பயம் பொதுவாக அர்த்தமுள்ளதாக இருக்காது. ஆனால் அதை உணருபவர்களுக்கு அது உண்மையானது. மக்களிடையே பொதுவாக காணப்படும் அச்சங்கள் மற்றும் அதற்கு என்ன ஃபோபியா என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு என்ன பயம் இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
News January 13, 2026
சுதந்திரத்திற்கு பின் முதல்முறை அலுவலகம் மாறும் PM

நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள் ₹20,000 கோடியில் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிரதமர் அலுவலகத்திற்கான (PMO) புதிய கட்டட பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ‘சேவா தீர்த்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் பொங்கலுக்கு பிறகு PM மோடி பணியை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திரம் பெற்றது முதல் ‘சவுத் பிளாக்’ பகுதியில் இயங்கி வந்த PMO முதல்முறையாக மாற உள்ளது.
News January 13, 2026
சுதாவின் அடுத்த பட ஹீரோ யார்?

‘பராசக்தி’ வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் அப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டாராம். சிம்பு அல்லது துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை அவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கடந்த காலங்களை போல் ஒவ்வொரு படங்களுக்கும் 6 ஆண்டுகள், 4 ஆண்டுகள் என இடைவெளி எடுக்காமல் இம்முறை உடனடியாக படத்தை இயக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


