News November 24, 2024
தொடங்கியது ஜானகி நூற்றாண்டு விழா

முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் நடத்தப்படும் இந்த விழாவை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஜெயலலிதாவை முன்னிறுத்த ஜானகி அரசியலில் இருந்து விலகியதால், அவரது தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடுவதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
Similar News
News March 16, 2026
FLASH: விலை ஒரேயடியாக ₹1 லட்சம் குறைந்தது

டாடா தனது EV கார்களுக்கு மார்ச் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம். எந்த மாடல் காருக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். இடதுபுறமாக SWIPE செய்து பாருங்க. இந்த தள்ளுபடி சலுகைகள் மார்ச் மாதம் வரை மட்டுமே வழங்கப்படும்.
News March 16, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியானது HAPPY NEWS

ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை பார்க்க உள்ளதாம். நாளை மறு ஆய்வு நடைபெறாவிட்டால் மார்ச் 19-ல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே படத்தை மறு ஆய்வுக்குழு பார்ப்பதாக இருந்த நிலையில், குழுவில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தள்ளிப்போனது. பொங்கலுக்கு வெளியாக இருந்த ஜன நாயகன் படம், சென்சார் பிரச்னையால் தற்போதுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது.
News March 16, 2026
ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

USA – ஈரான் போரின் எதிரொலியால், கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இந்நிலையில், வாரத்தில் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 939 புள்ளிகள் உயர்ந்து 75,502 புள்ளிகளிலும், நிப்டி 257 புள்ளிகள் உயர்ந்து 23,408 புள்ளிகளிலும் வர்த்தகமாயின. பெரும்பாலான வங்கிகளின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


