News November 24, 2024
சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
Similar News
News January 24, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, இன்று இரவு முதல் நாளை காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!
News January 23, 2026
ஆற்காடு வட்டத்தில் அறிவியல் கண்காட்சி தொடக்கம்

இராணிப்பேட்டை இன்று (ஜன.23) பள்ளிக் கல்வித் துறை சார்பில் “செழிப்பான தொகுதி வளர்ச்சி திட்டம்” கீழ் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தார். ஆற்காடு வட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி சிறப்பித்தனர்.
News January 23, 2026
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஜன.23 ஆம் தேதி தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


