News March 21, 2024
கரூர்: காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்

திமுக கூட்டணியில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய எம்.பி ஜோதிமணி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன் ஆகியோரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு கேட்டு வருகின்றனர். இதனால் கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் குளப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Similar News
News September 18, 2025
கரூர்: காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

கரூர் மாவட்ட காவல்துறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், “போதைப்பொருட்கள் உங்களைக் கட்டுப்படுத்த விட வேண்டாம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. “Just Say NO to Drugs” போன்ற வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை 9498100780 என்ற வாட்ஸ்அப் (அ) 100-க்கு தகவல் தெரிவிக்கலாம்.
News September 18, 2025
கரூரில் ஜவுளி பூங்காவை திறந்து வைத்து அமைச்சர்!

கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் உள்ள ஓயாசிஸ் ஜவுளிப்பூங்காவை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து திறந்து வைத்தார். உடன் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News September 18, 2025
கரூர் அருகே பெண் விபரீத முடிவு!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா ஆண்டிப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (50). இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மனவிரக்த்தியில் சாணப்பவுடரை சாப்பிட்டுள்ளார். பின் அவரை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை!