News November 24, 2024
சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
Similar News
News August 5, 2025
திருப்பத்தூர்: 10th பாஸ் போதும் ரயில்வே வேலை ரெடி

கொங்கன் ரயில்வேயில் உள்ள முக்கிய பதவியாக கீமேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <
News August 5, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் மழையின் அளவு வெளியீடு

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், வாணியம்பாடி, திருப்பத்தூர், கேத்தாண்டபட்டி, ஆம்பூர் ஆகிய பகுதிகளை நேற்று மாலை பெய்த கனமழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆலங்காயம் வனப்பகுதியில் 78 மி.மீட்டர் மலையும், வாணியம்பாடி பகுதியில் 49 மி.மீட்டர் மழையும், நாட்றம்பள்ளி 15 மி.மி மழையும் பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 5, 2025
திருப்பத்தூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருப்பத்தூரில் பெற்றோர்களை இழந்து உறவினர் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதம் ரூ2000 உதவித்தொகை பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் அல்லது மக்கள் குறைதீர்வு கூட்டம், ’உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.