News March 21, 2024
தென்காசி பாஜக அலுவலகத்தில் சமகவினருக்கு வரவேற்பு

தென்காசி சட்டமன்றத் தேர்தல் அலுவலகத்தில் இன்று மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்ட சமத்துவ கட்சியின் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த மாநில மாவட்ட நகர நிர்வாகிகளை பாஜகவினர் வரவேற்றனர்.
Similar News
News February 5, 2026
தென்காசி: உங்க வீட்ல VOLTAGE பிரச்சனயா?

தென்காசி மக்களே உங்க வீட்ல கரண்ட் கம்மியா வருதா? இதை சரி செய்ய வழி இருக்கு
1. வோல்டேஜ் பிரச்சனைய போட்டோ (அ) வீடியோ எடுங்க.
2. 94458 50811 (அ) 9443111912 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்க.
3. 94987 94987 எண்ணுக்கு அழைத்தும் புகார் தெரிவிக்கலாம்..
இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..
News February 5, 2026
தென்காசி தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு!

தென்காசி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 08.02.2026 அன்று மஞ்சம்மாள் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில் முற்பகல் 243 தேர்வர்களும் பிற்பகல் 244 தேர்வர்களும் எழுதவுள்ளனர். தேர்வானது காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் மற்றும் மதியம் 02.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெறும்.
News February 5, 2026
தென்காசியில் சல்லி சல்லியாக நொறுங்கிய வாகனம்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் வடக்கு பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இன்று யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த பழமையான புளியமரம் முறிந்து விழுந்தது. இதில் ஸ்டாண்டில் நிறுத்தி இருந்த தங்கராஜ் என்பவரின் ஆட்டோ சேதமடைந்தது. போக்குவரத்து மிகுந்த அந்த பகுதியில் அந்த நேரத்தில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.


