News November 24, 2024
சேலம் மாவட்டத்தில் இன்றைய நிகழ்வுகள்

சேலம் மாவட்டத்தில் இன்றைய நிகழ்வுகள்:➤ காலை 10 மணி மனம் மன்றம் பாவலர் 75 பவள விழா சண்முக மருத்துவமனை.➤ காலை 10 மணி முத்தமிழ் மன்றம் தமிழர் விருது வழங்கல் சேலம் கேசில்.➤ காலை 10 மணி நாம் தமிழர் கட்சியின் ரத்த தான முகாம் தாதகாப்பட்டி.➤ காலை 8 மணி சிறார்களுக்கு ஓவியத் திறனை மேம்படுத்தும் மகிழ்ச்சி சுவர் திட்டத்தின் கீழ் ஓவிய போட்டி.➤ மதியம் 3 to 4 மத்திய அரசை கண்டித்து இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்.
Similar News
News November 8, 2025
இளம்பிள்ளையில் சாவிலும் இணை பிரியாத தம்பதிகள்!

சேலம் இளம்பிள்ளை அருகே, காந்திநகர் பகுதியில் வசித்து வந்த பெரியண்ணன் (80) மற்றும் அவரது மனைவி பாக்கியம் (70) இருவரும் மகனுடன் வசித்து வந்தனர். வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நேற்று முன்தினம் மாலை பாக்கியம் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், மனைவியை இழந்த துக்கம் தாங்க முடியாமல் கணவர் பெரியண்ணனும் உயிரிழந்தார்.
News November 8, 2025
சேலம் இரட்டை கொலையில் மேலும் ஒருவர் கைது!

சேலம்: இளம்பிள்ளை அருகே 2 மூதாட்டிகள் நகைக்காக கொலை செய்யப்பட்டு, உடல் குட்டையில் வீசப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அய்யனாரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அவரை விசாரித்ததில், தூதனூர் பகுதியை சேர்ந்த பூபதி என்பவரும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மூதாட்டிகளின் உடல்களை குட்டையில் வீச பூபதி உதவியுள்ளார் என கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் பூபதியை அதிரடியாக கைது செய்தனர்.
News November 8, 2025
சேலம்: G Pay / PhonePe இருக்கா? இது முக்கியம்!

சேலம் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


