News November 24, 2024
சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஷேர் செய்யுங்க
Similar News
News October 29, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (அக்.28) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
செங்கை: சாலை விபத்தில் ஒருவர் பலி!

செங்கல்பட்டு: பவுஞ்சூர் அடுத்த தட்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(63). இவர், தனது பைக்கில் கூவத்துாரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக கிளம்பினார். தட்டாம்பட்டு அருகே சென்ற போது, நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் படுகாயமடைந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 28, 2025
செங்கல்பட்டு: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

செங்கல்பட்டு மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க


