News March 21, 2024
தஞ்சாவூர்: ஆட்சியர் முதல் கையெழுத்து

தஞ்சையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வாக்காளர் என்பதில் பெருமைப்படுங்கள் , வாக்களித்து ஜனநாயகததை காப்பாற்றுங்கள் என எழுதப்பட்ட பலகையில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஆணையர் மகேஷ்வரி, கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கையெழுத்து இட்டனர். பின்னர் தொடங்கிய பேரணியை இன்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Similar News
News January 25, 2026
தஞ்சை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
தஞ்சை: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜன.28ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அதே தினம் பிற்பகல் 3 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் நித்யா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News January 25, 2026
தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!


