News November 24, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் ▶குறள் எண்: 108 ▶குறள்: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ▶பொருள்: ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
Similar News
News October 14, 2025
போலி மருந்துகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் 3,000 நிறுவனங்களில் தயாரிக்கப்படும் 10,500 மருந்துகளை ஆய்வு செய்ய 1,467 ஆய்வாளர்களே பணியில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. TN-ல் 112 மருந்து ஆய்வாளர்கள் உள்ளனர். Coldrif Syrup குடித்த 22 குழந்தைகள் பலியான சம்பவத்தால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் முறையாக ஆய்வு செய்யாததால் பல மாநிலங்களில் போலி & தரமற்ற மருந்துகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
News October 14, 2025
உங்களின் சாய்ஸ் எது?

சீனியர் ஹீரோக்கள் இல்லாமல் இந்த வருடம் தீபாவளி ட்ரீட்டாக பிரதீப் ரங்கநாதனின் ‘டூட்’, துருவ் விக்ரமின் ‘பைசன்’, ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ ஆகிய 3 படங்கள் வெளியாக உள்ளன. இந்த 3 படங்கள் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், 3 படங்களின் டிரெய்லர்களும் வெளிவந்துவிட்டன. இவற்றில், உங்களின் ஆர்வத்தை தூண்டிய படம் எது.. கமெண்ட் பண்ணுங்க?
News October 14, 2025
BREAKING: அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு

மணல் குவாரி மோதல் வழக்கில் இருந்து அமைச்சர் சிவசங்கர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆவினன்குடியில் சிவசங்கர் தலைமையில் 2015-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். மேலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக சிவசங்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் சிவசங்கர் உள்ளிட்ட 27 பேரை விடுவித்து கடலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.