News November 24, 2024
ஆட்சியரிடம் அளிக்கும் மனுவில் கையெழுத்திட அழைப்பு

சிவகாசி பெரியகுளம் கண்மாய் சாலை தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையை தரம் உயர்த்தி, மின் விளக்குகள் அமைத்திட மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிப்பதற்கான மனு சிவகாசி பன்னீர் தெப்பத்தில் நாளை 24-11-2024 (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்களின் கையொப்பத்திற்காக வைக்கப்படுகிறது. நாளை கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மனுவில் கையெழுத்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதமர் மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வரும் எட்டாம் தேதி அன்று அரசினர் தொழிற்பெயர்ச்சி நிலையம் விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் அரசு/ பிரபல முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 5, 2025
விருதுநகர் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்து வரும் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை 16,13,476 கணக்கெடுப்பு படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் டிசம்பர் 11 வரை கணக்கெடுப்பு படிவங்களை பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


