News November 24, 2024
கழிவு மீன் ஆலையை மூட நாளை போராட்டம்

ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் 3 மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி கிராம மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலையை இழுத்து மூடவும், ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும் கூறி நாளை தூத்துக்குடியில் ஆலைக்கு எதிரான போராட்டக் குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Similar News
News December 16, 2025
தூத்துக்குடி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY NOW

தூத்துக்குடி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News December 16, 2025
தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடி மாநகராட்சியில் டிசம்பர் 17 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வல்லநாடு, கலியாவூர், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்தடை ஏற்படும். இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா கூறியுள்ளார்.
News December 16, 2025
தூத்துக்குடி மக்கள் கவனத்திற்கு.. கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எரிவாயு விநியோகம், புதிய இணைப்பு, மானியம், வங்கி கணக்கு, சேவை குறைபாடுகள் உள்ளிட்ட புகார்கள் குறித்து பொதுமக்கள் மனு அளித்து தீர்வு பெறலாம்.


