News November 24, 2024
இரவில் இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல், காரைக்காலிலும் இரவு 1 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. SHARE IT.
Similar News
News October 17, 2025
ஒரே இளைஞரை திருமணம் செய்த 2 பெண்கள்❤️❤️

கர்நாடகாவில் ஒரே மேடையில் 2 பெண்களை இளைஞர் கரம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. இளைஞர் வசிம் ஷேக்குடன்(25) சிறுவயதில் இருந்தே ஷிஃபா, ஜனத் இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். வசிமை பிரிய மனமில்லாமல் இருந்த இருவரும், அவரையே திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, குடும்பத்தினர் சம்மதத்துடன் ஒரே மேடையில் இருவரையும் வசிம் கரம்பிடித்தார்.
News October 17, 2025
இவர்களுக்கு ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும், அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு ₹1,000 கிடைக்காது. விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டில் சரியான முகவரி இல்லை என்றாலும் ₹1,000 கிடைப்பதில் சிக்கல் வரும். SHARE IT.
News October 17, 2025
சர்க்கரை நோயா? ஸ்வீட் எடு தீபாவளி கொண்டாடு

தீபாவளிக்கு வித விதமான ஸ்வீட் ருசித்திட எல்லோரும் விருப்பப்படுவோம். ஆனால் உடலில் சர்க்கரை அளவுகள் அதிகரித்து விடுமோ என்ற பயம் ஏற்படும். எந்த ஸ்வீட்டை எந்த அளவில் சாப்பிட்டால் பிரச்னை ஏற்படாது என தெரிந்துகொள்ளுங்கள். இதில், கிளைசெமிக் குறியீடு (GI) என்பது நாம் சாப்பிடும் உணவானது, உடலின் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை குறிக்கிறது. போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்..