News November 24, 2024
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் குவிந்த 4308 மனுக்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்று (நவம்பர் 23) நடந்தது. இதில் பெயர் சேர்க்க 2449 விண்ணப்பங்களும், நீக்கம் செய்ய 396 விண்ணப்பங்களும், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக 1463 விண்ணப்பங்களும் என மாவட்டம் முழுவதும் 4,308 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 8, 2025
வேலூர்: பட்டாவில் பெயர் மாற்றமா? இனி ஈஸி!

வேலூர் மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <
News November 8, 2025
வேலூர் இன்னும் சற்று நேரத்தில் சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 6 தாலுகாவிலும் இன்று (நவ.8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
வேலூர் மாவட்டத்தில் நாளை 9561 பேருக்கு எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 2025-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர் மற்றும் சிறைக்காவலர், தீயணைப்பாளர்கள் தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நவ.9-ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் காட்பாடி விஐடி பல்கலைக்கழகம், தொரப்பாடி தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்பார்க் பள்ளி என 3 மையங்களில் மொத்தம் 9,561 பேர் தேர்வு எழுத உள்ளனர். என அதிகாரிகள் தெரிவித்தனர்.


