News November 23, 2024
நோட்டாவுக்கு கீழ் சென்ற விசிக வேட்பாளர்!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுனில் லக்ஷ்மண்ராவ் வேகேகர், போகர்தன் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் இன்று வாக்கு எண்ணப்பட்ட நிலையில், அவர் வெறும் 105 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார். இதன்மூலம் அவர் 1,28,375 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மேலும் அத்தொகுதியில் நோட்டாவுக்கு 727வாக்குகள் விழுந்துள்ளது குறிப்படத்தக்கது.
Similar News
News December 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 8, கார்த்திகை 22 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 1.45 PM – 2.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9.15 AM – 10:15 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News December 8, 2025
சனாதன தர்மம் மூடநம்பிக்கை அல்ல அறிவியல்: PK

தமிழகத்தில் இந்துக்கள் மத சம்பிரதாயங்களை பின்பற்ற கூட சட்ட போராட்டம் நடத்த வேண்டியிருப்பதாக <<18482516>>பவன் கல்யாண்<<>> தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் இந்துக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். சனாதன தர்மம் என்பது மூடநம்பிக்கை இல்லை, ஆன்மிக அறிவியல். அதேபோல், பகவத் கீதை என்பது பிராந்திய, மத நோக்கம் இல்லாதது. ஒவ்வொரு இளைஞரும் அதை படிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
தோனியால் மட்டுமே இது சாத்தியம்: முரளி விஜய்

தோனி இந்தியாவில் பிறந்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும் என EX இந்திய வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார். தோனி இயற்கையானவர், தனித்துவம் மிக்க தலைவர். 2007 T20 WC-ல் கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவை வீச சொன்னது உள்ளிட்ட தனிச்சிறப்பு வாய்ந்த முடிவுகளை அவரால் மட்டுமே எடுக்க முடியும். அவரை போல வேறு எந்த வலதுகை பேட்ஸ்மேனாலும், மிகப்பெரிய சிக்ஸர் ஷாட்களை அடிக்க முடியாது என்றும் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.


