News November 23, 2024
அமரன் ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அமரன் திரைப்படம், வசூலிலும் ரூ.300 கோடிக்கும் மேல் குவித்து சாதனை படைத்துள்ளது. அந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும், அதை பார்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஆம், அந்த படத்தை நெட்பிலிக்ஸ் ஓடிடி வாங்கியுள்ளதாகவும், அதை இந்த மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 5, 2025
9-ம் தேதி கடைசி: அரசு மெடிக்கல் கல்லூரி அட்மிஷன்

2025-2026 கல்வியாண்டிற்கான M.D. (Yoga & Naturopathy) PG-க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ₹3,000. SC/ ST பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை. வரும் 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நாளை முதல் <
News November 5, 2025
SIR கணக்கெடுப்பில் குளறுபடி: திமுக குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் வாக்காளர் SIR பணி தொடங்கிய நிலையில், பெரும்பாலான இடங்களில் கணக்கீடு படிவங்கள் தரப்படவில்லை என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார். ஓரிரு தொகுதிகளில் படிவங்களை கொடுத்துவிட்டு, மறுநாளே பூர்த்தி செய்துதர கேட்பதாகவும், 2002-க்கு பிறகு வெளியிடப்பட்ட அனைத்து வாக்காளர்கள் பட்டியலும் செல்லுபடி தன்மை அற்றதாக ஆகிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 5, 2025
இன்சூரன்ஸ் பணத்துக்காக போலி டெத் டிராமா!

₹25 லட்சம் பணத்துக்காக கணவன் இறந்துவிட்டதாக நாடகமாடிய இளம்பெண் மற்றும் அவரது கணவன் போலீசில் சிக்கியுள்ளனர். லக்னோவை சேர்ந்த ரவி சங்கர், 2023 ஏப்.9 அன்று இறந்துவிட்டதாகக் கூறி, ஏப்.21 அன்று இன்சூரன்ஸ் கம்பெனியில் மனைவி கேஷ் குமாரி டாக்குமெண்ட் சமர்ப்பித்துள்ளார். பின்னர், கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தில் தம்பதி ஜாலியாக இருப்பதை அறிந்த போலீசார் இருவரையும் கொத்தாக தூக்கி சிறையில் அடைத்துள்ளனர்.


