News November 23, 2024
உங்களுக்கு ஆட்சிதான் போச்சு.. எனக்கு கட்சியே போச்சே..! (1/3)

உத்தவ் தாக்கரே நிலைமையை நினைத்தால்தான் பரிதாபமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி மெகா வெற்றியை பதிவு செய்துள்ளது. INDIA கூட்டணித்தலைவர்கள் ஆட்சியமைக்க முடியவில்லையே என்ற கவலையில் இருக்க, தாக்கரேவோ கட்சியையே பறிகொடுத்துள்ளார். இனி அவரின் அரசியல் எதிர்காலம் என்ன என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
Similar News
News January 11, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 577 ▶குறள்: கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.. ▶பொருள்:கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.
News January 11, 2026
இந்தியாவுக்கு பின்னடைவு.. பண்ட் விடுவிப்பு?

NZ-க்கு எதிரான ODI தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பயிற்சியின் போது வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்த தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடைசியாக 2024 ஆகஸ்டில் நடந்த SL-க்கு எதிரான ODI தொடரில் விளையாடினார். இடைப்பட்ட காலத்தில் அணியில் இடம்பெற்றாலும், Playing 11-ல் இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போதும் அந்த துரதிர்ஷ்டம் தொடர்கிறது.
News January 11, 2026
டிரோன் காட்சியை மெய்மறந்து ரசித்த PM மோடி

குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோமநாதர் ஆலயத்தில் PM மோடி நேற்று இரவு சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, கோயில் வளாகத்தில் நடைபெற்ற கண்கவர் டிரோன் காட்சியை கண்டுகளித்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது X பக்கத்தில் பகிர்ந்த அவர், நமது தொன்மையான நம்பிக்கையும், நவீன டெக்னாலஜியும் இணைந்து, இந்தியாவின் கலாசார சக்தியை உலகிற்கு உணர்த்தியதாக பதிவிட்டுள்ளார்.


