News March 21, 2024
பறக்கும் படை சோதனையில் ஒரு லட்சம் பறிமுதல்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (மார்.21) கண்டமனூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர். இதில் அவ்வழியே வந்த சதீஷ்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் பணத்தினை சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News October 19, 2025
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த தேனி முன்னாள் எம்.பி

வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கிய நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் சுற்று பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அங்குள்ள மக்களை சந்தித்து வெள்ள பாதிப்புகளை குறித்து கேட்டறிந்தார்.
News October 19, 2025
தேனியில் 1 ரூபாய்க்கு சிம் கார்டு.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள BSNL அலுவலகத்தில் 1 ரூபாய்க்கு 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உடன் கூடிய இலவச சிம் கார்டை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை 15.11.2025 வரை மட்டுமே செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.
News October 19, 2025
BREAKING: தேனியில் தீபாவளியன்றும் கனமழை

மன்னார் வளைகுடா மற்றும் அதைன ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக தேனியில் நாளை (அக்.20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.