News November 23, 2024
நயனை ஆதரிக்க இதுதான் காரணம்: பார்வதி

தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவிற்கு ஆதரவளித்தது ஏன் என நடிகை பார்வதி விளக்கம் அளித்துள்ளார். சுயமாக வளர்ந்த நயன், இப்படி ஒரு பகிரங்க கடிதத்தை காரணம் இல்லாமல் எழுதியிருக்க மாட்டார். சுற்றியுள்ளவர்களின் ஆதரவு கிடைக்காத போது ஒருவருக்கு எப்படி இருக்கும் என்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் தானும் அதுபோன்ற சம்பவங்களை கடந்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News August 17, 2025
சொத்து பதிவு இனி ரொம்ப ஈசி.. தமிழக அரசின் புதிய மாற்றம்

சொத்துகளை வாங்குவது, விற்பதில் உள்ள சிக்கல்களை குறைக்க ஆளில்லா பதிவு (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த TN அரசு தயாராகி வருகிறது. அதன்படி, சொத்துகளை விற்பவரோ, வாங்குபவரோ பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார். இந்தாண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வருமாம். SHARE IT.
News August 17, 2025
25 மாவட்டங்களில் மழை வெளுக்கும்: IMD

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சென்னை, செ.பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், க.குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. உங்க ஊருல மழையா?
News August 17, 2025
குழந்தைகள் அருகே Scent அடிக்குறீங்களா.. கவனம் ப்ளீஸ்!

குழந்தைகளின் சருமம், நுரையீரல் போன்றவை வளரும் நிலையில் இருப்பதால், Scent-ல் இருக்கும் ரசாயனங்கள் பெரும் பாதிப்புகளை உண்டாக்கும்.
➤மூச்சுத்திணறல், ஆஸ்துமா பிரச்னைக்கு வழிவகுக்கலாம்
➤குழந்தைகளின் சருமம் வளர்ந்தவர்களை விட 30% மெல்லியது என்பதால், சருமத்தில் எரிச்சல், தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.
➤அதிகப்படியான ரசாயனங்கள், குழந்தைகளுக்கு ஹார்மோன் சீர்குலைவையும் ஏற்படுத்தலாம். SHARE IT.