News November 23, 2024
இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்; விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்க சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் கால அவகாசம் 10.12.2024 அன்று வரையில் நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 1, 2025
சென்னையில் இன்று முதல் உயர்வு…

சென்னையில் இன்று (செப்.1) முதல் டீ, காபி விலை உயர்த்தி விற்கப்படும் என டீக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதன்படி▶️பால் – ரூ.15, ▶️லெமன் டீ – ரூ.15,▶️காபி – ரூ.20, ▶️ஸ்பெஷல் டீ – ரூ.20, ▶️ராகி மால்ட் – ரூ.20, ▶️சுக்கு காபி – ரூ.20, ▶️பார்சல் டீ – ரூ.45,▶️பார்சல் காபி -ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்க கருத்தை பதிவு செய்து மறக்காம ஷேர் பண்ணுங்க
News September 1, 2025
சென்னையில் இலவச பயிற்சி!

சென்னை, கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் உள்ள உதவியாளர் பணிக்கு 157 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டுறவு வங்கி தேர்வுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இன்று (செப்டம்பர் 1) முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். <
News August 31, 2025
சென்னையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 31) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.