News November 23, 2024
ரூ.1,000 கல்வி உதவித் தொகை தேர்வுக்கான அவகாசம் நீட்டிப்பு

9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கான ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நவ.25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், விருப்பமுள்ள மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளது.
Similar News
News September 17, 2025
Beauty Tips: கழுத்தில் உள்ள கருமையை சிம்பிளா நீக்கலாம்

➤பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் கழுத்தில் உள்ள கருமை அகலும். ➤பட்டை பொடியில், தேன் கலந்து கழுத்தில் தடவுங்கள். இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதன் மூலம் கழுத்திலுள்ள கருமை நீங்குவதோடு தழும்புகள் மறையும். SHARE.
News September 17, 2025
கால்ல விழாதீங்க: ஸ்டாலின் செய்த செயல்

கரூரில் கொட்டும் மழையில் திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் தொடக்கத்தில், கட்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நற்சான்று விருதுகளை CM ஸ்டாலின் வழங்கினார். அப்போது ஒரு சிலர் ஸ்டாலின் கால்களில் விழுந்து ஆசி பெற முற்பட்டனர். ஆனால், ‘காலில் எல்லாம் விழ வேண்டாம்’ எனக் கூறி, உடனே அவர்களை எழச் சொல்லியுள்ளார். இந்த நிகழ்வை திமுகவினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றன.
News September 17, 2025
தேர்தல் ஆணையத்திலும் பொய் சொன்ன அன்புமணி: ராமதாஸ்

PMK தலைவராக அன்புமணியை அங்கீகரிக்கும் கடிதத்தை தேர்தல் ஆணையம் (ECI) திரும்பப் பெற வேண்டும் என ராமதாஸ் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையிலும், PMK தலைவராக அன்புமணியையே ECI அங்கீகரித்ததால் மீண்டும் உரசல் ஏற்பட்டது. இந்நிலையில், ECI கதவை தட்டியுள்ள ராமதாஸ் தரப்பு, பிஹாரில் போட்டியிடுவதாக பொய் சொல்லி அன்புமணி அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் சாடியுள்ளது.