News November 23, 2024
மாநகராட்சி புகார் அளிக்க WhatsApp எண் வெளியீடு

திருநெல்வேலி மாநகரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் மழை நீர் தேக்கம், குடிநீர் கசிவு, குப்பை, பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்டவை தொடர்பாக புகார் அளிக்க எண் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தங்கள் புகார்களை மாநகராட்சி வாட்ஸ்அப் புகார் எண்ணான 9489930261 என்ற எண்ணில் குறைகளை தெரிவிக்கலாம் என மேயர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
நெல்லை மாணவியை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்

பஹ்ரைனில் நடைபெற்ற 3-வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற நெல்லையை சேர்ந்த தடகள வீராங்கனை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். மேலும் சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்துள்ள எட்வினா ஜேசனைபாராட்டி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்தார்.
News October 29, 2025
நெல்லை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 29, 2025
நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு நவம்பர் 22 ஆம் தேதி ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்து நெல்லை மாநகர கமிஷனர் சந்தோஷ் காதி மணி வெளியிட்ட செய்தி குறிப்பில்; பாலை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை ஆண்கள் 60 பேர், பெண்கள் ஐந்து பேர் என 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளன என அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க


