News November 23, 2024

கம்பீர் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்..!

image

கம்பீரின் 16 ஆண்டுகால சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார். IND இடது கை பேட்ஸ்மேன், ஒரு ஆண்டில் அடித்த அதிகபட்ச ஸ்கோராக, கம்பீர் எடுத்த 1134 ரன்கள் இருந்தது. கடந்த 2008-ல் 8 போட்டிகளில் ஆடிய கம்பீர், 6 அரைசதம், 3 சதங்களை அடித்திருந்தார். அந்த சாதனையை, நடப்பு ஆண்டில் 12 போட்டிகளில் விளையாடி 1204 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார். இந்த ஆண்டில் 8 அரைசதம், 2 சதங்களை அவர் அடித்துள்ளார்.

Similar News

News September 4, 2025

வேகமாக பரவும் வைரஸ்.. அமைச்சர் புதிய விளக்கம்

image

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவின் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அதன் தாக்கம் தமிழகத்திலும் இருக்குமோ என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில், மூளையை தின்னும் அமீபா பாதிப்பு இதுவரை தமிழகத்தில் தென்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய நோய் தொற்று எதுவும் இல்லாததால் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற பதற்றமான சூழல் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

News September 4, 2025

பணம் கையில் தங்க வேண்டுமா? 3 சூப்பர் டிப்ஸ்

image

எப்போதுமே கையில் பணம் புழங்க வேண்டுமென்றால், இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
✱மாதந்தோறும் சம்பளம் வந்ததும் அந்த மாதத்திற்கான வரவு செலவு பட்ஜெட்டை தயாரித்து, அத்தியாவசிய செலவு, பொழுதுபோக்கு செலவுகளை பட்டியலிடுங்கள். முடிந்தவரை இதனை மீறாதீர்கள்.
✱UPI-க்கு பதிலாக பணத்தை கையில் கேஷாக வைத்துக்கொண்டு செலவிடுங்கள். இது செலவை குறைக்கும். ✱அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவதை தவிருங்கள். SHARE IT.

News September 4, 2025

பிரேமலதா எடுத்த முக்கிய முடிவு.. திமுக தரப்பு ஆதரவு

image

விஜயகாந்தின் Ex MLA பென்ஷன் தொகையான ₹15,000 கேட்டு பிரேமலதா விண்ணப்பித்துள்ளார். பல கோடி சொத்து உள்ள உங்களுக்கு எதற்கு இந்த பென்ஷன் என சோசியல் மீடியாவில் சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், திமுக Ex MP அப்துல்லா, பணம் என்பதை தாண்டி, தன் கணவர் தன்னை தவிக்கவிட்டு போகவில்லை என ஒரு மனைவியாக அவரை இந்த பென்ஷன் உணர வைக்கும் எனவும், இது வெறும் பணத்திற்காக அல்ல என தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!