News November 23, 2024

வேலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆயத்த கூட்டம்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 9 வருடங்களாக அகவிலைப்படி வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து சென்னையில் டிச., 17ல் அரை நிர்வாண போராட்டம் நடத்தவுள்ளனர். இதற்கான ஆயத்த கூட்டம் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் மீட்பு சங்கம் வேலூர் மண்டலம் சார்பில் டவுன் ஹாலில் இன்று நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 25, 2025

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். (<<17509672>>தொடர்ச்சி)<<>>

News August 25, 2025

வேலூர்: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

image

வேலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <>க்ளிக் <<>>செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்)

News August 25, 2025

தாதிரெட்டிப்பள்ளி அருகே விபத்து

image

காட்பாடி தாலுகா மேல்பாடிைய அடுத்த தாதிரெட்டிப்பள்ளி பகுதியில் நேற்று மாலை இருசக்கர வாகனமும், சரக்கு வேணும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில் வேலூர் அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!