News November 23, 2024
அடுத்த CM என் தந்தைதான்: ஷிண்டே மகன் அதிரடி

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றி உறுதியானதை அடுத்து, அடுத்த முதல்வர் ஃபட்னாவீஸா அல்லது ஏக்நாத் ஷிண்டேவா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீநாத் ஷிண்டே கூறுகையில், வளர்ச்சியை மட்டுமே மனதில் வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். என்னை பொறுத்தவரை, எனது தந்தை தான் முதல்வர் பதவியில் தொடர வேண்டும் எனக் கூறினார்.
Similar News
News December 31, 2025
BREAKING: 2026 பிறந்த உடனே அதிர்ச்சி

புத்தாண்டு பிறந்த சில மணி நேரங்களே ஆன நிலையில், ஜப்பான் மக்களை பெரும் சோகம் சூழ்ந்துள்ளது. 6 ரிக்டர் என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடலின் 19.3 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் சேதாரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக, இன்று பகலில் 3.4 ரிக்டர் என்ற அளவில் திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
News December 31, 2025
நாளை முதல் வரும் மாற்றங்கள்

2026 ஜனவரி 1-ம் தேதி முதல் நாட்டில் சில விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளன. புத்தாண்டு தொடக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்வது மிக அவசியம். அவை என்னென்ன மாற்றங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 31, 2025
போதையில் இருப்பவர்களுக்கு இன்று Free Ride!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அளவுக்கு அதிகமாக போதையில் இருப்பவர்களை இலவசமாக வீட்டிற்கு அழைத்து செல்ல உள்ளதாக தெலங்கானா டெலிவரி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இந்த இலவச சேவை வழங்கபட உள்ளது. இதற்காக 500 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சேவையை பெற விரும்புவர்கள் 8977009804 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


