News November 23, 2024
மீண்டும் முதல்வராகும் ஹேமந்த் சோரன்!

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி முகத்தில் உள்ளது. இதில், ஆளும் ஜேஎம்எம் 29 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகவிருப்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது. பண மோசடி புகாரில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஹேமந்த் சோரன் 5 மாதங்கள் சிறை செல்ல நேரிட்டது. ஜாமினில் வெளியே வந்து மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 21, 2026
ஈரோட்டில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

மின்பராமரிப்பு பணியால் நாளை(ஜன.22) சென்னிமலை நகர், அவல்பூத்துறை, தாளவாடி, கொளப்பலூர், முகாசி அனுமன்பள்ளி, ராயபாளையம், குமராபுரி, பசுவப்பட்டி, கொடுமணல், மல்லநாயக்கனூர், அயலூர், சூசைபுரம், உலகபுரம், ஞானிபாளையம், ராசாம்பாளையம், ஊஞ்சப்பாளையம், வெள்ளவலசு, பள்ளிபாளையம், மந்திரிபாளையம், அம்மன் கோவில்பதி, சமத்துவபுரம், கெட்டவாடி மற்றும் மல்லன்குழி பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்.
News January 21, 2026
இன்று கவனம் பெற்ற இரு இணைப்புகள்.. யாருக்கு பலன்?

இன்று நிகழ்ந்துள்ள இரு இணைப்புகள் (திமுகவில் வைத்திலிங்கம், NDA-வில் TTV) அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. வைத்திலிங்கம் இணைந்திருப்பது ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் திமுகவுக்கு பலன் கொடுக்கும். அதேநேரம் TTV இணைந்திருப்பது தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல், டெல்டாவிலும் அதிமுகவுக்கு கூடுதல் பலமாக அமையும். 2021-ல் அமமுக பிரித்த வாக்குகளே, அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
News January 21, 2026
கணவன் நாக்கை கடித்து துப்பிய மனைவி

கணவன் மனைவிக்குள் சின்னச் சின்னச் சண்டைகள் வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த சண்டை அடுத்த நில மணி நேரங்களில் சரியாகிவிடும். ஆனால், உ.பி.யில், திருமணமாகி ஓராண்டு முடிவதற்குள் கணவனின் நாக்கை கடித்து துப்பியிருக்கிறார் மனைவி. காசியாபாத்தை சேர்ந்த விபின் தினமும் முட்டை குழம்பா என கேட்டதற்கு, ஆத்திரமடைந்த மனைவி இஷா, தனது பற்களால் கணவனின் நாக்கை துண்டித்துள்ளார்.தற்போது, இஷாவை போலீசார் கைது செய்தனர்.


