News November 23, 2024
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 8.30 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு- வட மேற்காக நகர்ந்து 25ஆம் தேதி மத்திய வங்கக் கடலில் நிலை கொள்ளும். மேலும், அது தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால் வரும் 26 முதல் 28 வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 31, 2025
விண்ணில் நெருப்பு பந்துகள்! எப்போது பார்க்கலாம்?

2026 தொடக்கத்திலேயே இயற்கை ஓர் அழகான வானியல் விருந்தை அளிக்கவுள்ளது! அதுதான் ‘குவாட்ரான்டிட்’ எரிகல் மழை. ஜன.3 இரவு மற்றும் 4-ம் தேதி அதிகாலை இந்த நிகழ்வு உச்சத்தை எட்டும். 6 மணி நேரம் மட்டுமே நீடிக்கும் எரிகல் மழையின் போது, சுமார் 120 எரிகற்கள் வரை வானை கிழித்து செல்லும். மொட்டை மாடியில், வடக்கு திசையில் வெறும் கண்களாலேயே இதை பார்க்கலாம். பிரகாசமான இந்த நெருப்பு பந்துகளை பார்க்க மிஸ் பண்ணாதீங்க!
News December 31, 2025
சொல்லாம போயிட்டீயே அப்பா… கதறும் புகழ்

தன்னுடைய தந்தை உயிரிழந்த செய்தியை பிரபல நகைச்சுவை நடிகர் விஜய் டிவி புகழ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அப்பா என்கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டீயே.. தெய்வமே இப்படி சொல்லாம போயிட்டீயே என தனது மன ஆற்றாமையை கொட்டியுள்ளார். KPY, CWC உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான புகழ், தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தந்தையை இழந்த புகழுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
News December 31, 2025
பொங்கல் பரிசு.. இரட்டிப்பு இனிப்பான செய்தி

பொங்கல் பரிசு பற்றிய இனிப்பான அறிவிப்பை புத்தாண்டு பரிசாக இன்று CM ஸ்டாலின் அறிவிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக பரிசுத் தொகையாக ₹3,000 வழங்கப்படலாம் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன் மூலம் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, முந்திரி, உலர் திராட்சை அடங்கிய பொங்கல் தொகுப்புடன், பரிசுத் தொகையும் வழங்கப்படலாம்.


